மருத்துவருக்கு பதிலாக கணவர் சிகிச்சை! – நாய் உயிரிழப்பு!

5472

வெயங்கொட, பத்தலகெதர பிரதேசத்திலுள்ள மிருக வைத்திய நிலையமொன்றில், பெண் மிருக வைத்தியருக்கு பதிலாக அவரது கணவர் சிகிச்சை வழங்கியதால், நாயொன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் குறித்த நாயின் உரிமையாளர், வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மிருக வைத்திய நிலையத்தின் பெண் மிருக வைத்தியர், குழந்தை பேற்றுக்குப் பின்னர் வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் அவருக்கு பதிலாக அவரது கணவர் மிருகங்களுக்கு சிகிச்சை வழங்குவதாகவும் தெரியவருகிறது.

தமது நாய்க்கு அந்த மிருக வைத்திய நிலையதால் சிகிச்சை பெற்ற பின்னர் நாய் உயிரிழந்ததாக தெரிவித்து பெண் மிருக வைத்தியருக்கு எதிராக வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெருமதியான ஜெர்மன் ஷெப்பட் இன நாய் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version