கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு!

knife

மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் நேற்றைய தினம் மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்தில் காயமடைந்த குறித்த பெண் (வயது-22) அயலவர்களால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காங்கேசன்துறை பொலிஸார், தலைமறைவாகியுள்ள குறித்த பெண்ணின் கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version