tamilni 31 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்

Share

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்

குருநாகல், வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார்.

இக்கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் குருநாகல், மரலுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் 02 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதாகவும், குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபரான கணவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தால் சிறை அதிகாரியின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...