இலங்கையில் இளம் மனைவியின் கொடூர செயல்

24 6641999f1d70b

இலங்கையில் இளம் மனைவியின் கொடூர செயல்

குருநாகலில் கணவனை கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்துவிட்டு, இரவில் சடலத்தை தோளில் சுமந்து சென்று மேல் கிரிபா ஏரியில் வீசியதாக மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேல் கிரிபா, சரகன்வ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய உதய குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான மனைவி கணவரின் கழுத்தை நெரித்து சடலத்தை தோளில் சுமந்து சுமார் 150 மீற்றர் தூரம் வரை சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version