களுவாஞ்சிக்குடி − ஓந்தாச்சிமடம் பகுதியில் 31 வயதான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவனின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், சந்தேகநபர் மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 38 வயதான சந்தேகநபர் அண்மையிலேயே வெளிநாட்டிலிருந்து வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் கையாளப்பட்ட விதம் தொடர்பிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment