முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும்.
இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவால், ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
” முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதம் கிடைக்காமையால், கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடு திரும்ப முடியாதுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
எந்தவொரு பிரஜைக்கும் தமது நாட்டுக்கு வருவதற்கான உரிமை இருக்க வேண்டும்.
எனவே, முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய வரப்பிரதாசம் உள்ளிட்ட சலுகைகள் கோட்டாபய ராஜபக்சவுக்கும் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவரின் குடும்பத்தாரும் நாட்டுக்கு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். ” – எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews