நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் முடக்கம்!

tamilni 332

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் முடக்கம்!

அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று (24.08.2023) அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஏழு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளாா்.

இதன் காரணமாக சி.டி. பரிசோதனை, எக்ஸ் ரே பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. பரிசோதனை, சகல இரசாயன பரிசோதனைகள் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version