யாழில் கோர விபத்து! – சங்கத்தானை இளைஞன் பலி

images 1 11

கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை – கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் இரவு (25) விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 25 வயதான கோ.கஜீபன் ஆவார். இவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய உத்தியோகத்தர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Exit mobile version