கொடிகமத்தில் கோர விபத்து: சாரதி பலி

image 6ca44b926b

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் –  மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version