வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியா குறித்த நபர், யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அவரது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்த்து வருகிறார் என கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த நபரின் வீட்டினை நேற்றைய தினம் சுற்றிவளைத்த பொலிஸார் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews