க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வியமைச்சு விளக்கமளித்துள்ளது.
அதன்படி பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப்பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்படாது.
பரீட்சை சூழலுக்கு ஏற்ப இடையூறான பாடசாலையாக இருந்தால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளர், ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும் குறித்த பாடசாலைகளுக்கு உரிய பணியிடங்களை பரிந்துரைப்பதும் கற்றல் முறைகளை மேற்கொள்வதற்கும் உள்ளூராட்சி கல்விப் பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment