ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பொலிஸ் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர, ஜனாதிபதி மாளிகை முன் போராட்டத்தை முன்னெடுத்தார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு சென்ற அவர், நுழைவாயிலுக்கு முன்பே அமர்ந்து, ‘கோட்டா வெளியே வா’ என கோஷமெழுப்பிறவாறு போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஹிருணிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து மேலும் சிலர் அங்கு வந்தனர் . ஜனாதிபதி மாளிகையை சூழ பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#SriLankaNews