மரபுரிமை சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்ப்பாணம் – கோட்டை பகுதியில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சி தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ்ப் குறித்த கண்காட்சி கூடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், ஓய்வு பெற்ற வரலாற்றுதுறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#SriLankaNews