நாட்டில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் நாளைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தேவாலய மதகுருமார்களுடன் கலந்துரையாடி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
அத்தோடு வீதி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment