1750703321 srilankan airlines
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடர்த்தியான மூடுபனி: 4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மத்தளை மற்றும் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டன!

Share

இன்று அதிகாலையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய அடர்த்தியான மூடுபனி காரணமாக, இங்கு தரையிறங்க வந்த நான்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

அதன்படி, சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த என்கின்ற இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-881 விமானங்கள் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 என்கின்ற விமானமும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மேலதிகமாக சவுதி அரேபியாவின் தம்மத்திலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதிகாலையில் நிலவிய அடர்த்தியான மூடுபனி தற்போது தணிந்துள்ளதால், விமானங்கள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடிந்தது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், மூடுபனி தணிந்ததும் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினர்.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...