25 684a4607670bb
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறும் நோய் – சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

எதிர்வரும் வாரங்களில் அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்பதால், நாடு முழுவதும் டெங்கு தொற்றின் தீவிர பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரிக்கவில்லை. எனினும் மழை தொடர்ந்தால் இது விரைவாக மாறக்கூடும், ஏனெனில் தேங்கி நிற்கும் நீர் நுளம்புகளுக்கு சிறந்த இனப்பெருக்க இடமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அப்புறப்படுத்தப்பட்ட கொள்கலன்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர் நிலைகள் போன்ற நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தி, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்யவும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலிகள் அல்லது தோல் வெடிப்புகள் போன்ற அறிகுறிகள் தோன்றினால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...