காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (21) இரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் நிகழ்ந்த போது வாகன சாரதி மாத்திரமே பயணித்துள்ளார்.
இந்நிலையில், காங்கேசன் துறை கடற்படை முகாமின் தீயணைப்பு வாகனம் தீயை அணைத்தபோதும் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகி விட்டது.
#Srilanka news