25 ஆம் திகதி ஹர்த்தால் – தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு

153224 strike

எதிர்வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு பகுதிகளில் முழுமையான கதவடைப்புக்கு இன்றைய தினம் தமிழ் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குறித்த கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

#SriLankaNews

Exit mobile version