தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, இன்று நள்ளிரவு தொடக்கம் தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகுகின்றன எனவும் அவர் மேலும் கூறினார்.
#SriLankaNews