rtjy 43 scaled
இலங்கைசெய்திகள்

நேர்காணலின் போது கோபமடைந்த ஹரின் பெர்னாண்டோ

Share

நேர்காணலின் போது கோபமடைந்த ஹரின் பெர்னாண்டோ

புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தொலைக்காட்சி நேரலை நேர்காணலின் போது ஆத்திரமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்காணலின் தொகுப்பாளர் தனது கேள்விகளை முன்வைத்த விதத்தை ஆட்சேபித்த பின்னர் அமைச்சர் வெளிநடப்பு செய்யப்போவதாக அச்சுறுத்தினார்.

தொகுப்பாளர் குண்டர்களைப் போல் சில கேள்விகளை முன்வைப்பதாக அமைச்சர் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் தொடர்பான தனது திட்டங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டதாக அமைச்சர் தொகுப்பாளரிடம் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தொடர்பாக அமைச்சர் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்ததாக தொகுப்பாளர் குற்றம் சாட்டியபோதே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும், அறிவிப்பாளர் கேட்கும் பதில்களை வழங்கத் தயாராக இல்லை என்று கூறிவிட்டு வெளியேறப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...