ரணில் ஹரின் மனுஷ
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு ஹரின், மனுஷவும் ஆதரவு! – பறந்தது கடிதம்

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

நெருக்கடியான நிலையில் நாட்டைப் பொறுப்பேற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னிலையானமைக்காக ஆதரவு வழங்கவுள்ளதாக அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஸ்தாபிக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கத் தாம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்பட நடவடிக்கை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனைத்துக் கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும் பட்சத்தில் அமைச்சின் பொறுப்புக்களை உரிய வகையில் நிறைவேற்றவுள்ளதுடன், அமைச்சர்களுக்குக் கிடைக்கப்பெறும் வரப்பிரசாதங்கள் எவையையும் ஏற்கப்போவதில்லை எனவும், அவற்றை நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒதுக்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...