25 6846be325a66f
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.

அதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு வசதியாக உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு பயங்கரவாத விசாணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...