tamilnih 3 scaled
இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் புத்திசாதூரியத்துடன் செயற்பட வேண்டும்

Share

இலங்கையர்களாகிய எமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், பாரிய சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டியதுமான புதிய ஆண்டு மலர்ந்துள்ளது.

இச்சவால்களை வெற்றிக் கொள்வதற்கு கடந்த கால தவறுகளை சரி செய்து கொண்டு, பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கண்டு உணர்ச்சிவசப்படாமல் புத்திசாதூரியத்துடன் செயற்பட வேண்டும் என்ற உறுதியை நாம் மனதில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான வாழ்த்து செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.

மேலும், 2024 ஆவது வருடம் தேர்தல் வருடமாக அமைகின்றமையால் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது அரசியல் பாகுபாடு இன்றி மரியாதைக்குரியவர்களை தெரிவு செய்வதற்கு அறிவார்ந்த மக்கள் நடவடிக்கைச் செய்ய வேண்டும்.

தனித்திருந்து சவால்களை வெற்றிக்கொள்ள முடியாது என்பதை கடந்த வருடங்கள் நமக்கு உணர்த்தியுள்ளது. இந்த சமூகத்தில் வாழ்வது நான், நீ, நாம் எனும் பிம்பங்களே. பரஸ்பர மரியாதையுடன் மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயற்படுவதின் ஊடாக சுபிட்சமான தேசத்தை கட்டமைக்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆகையால் மற்றவருக்கு அதிர்ச்சியை விளைவிக்கும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட கூடாது. ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக செயற்பட வேண்டும். சரியான கொள்கைகளுக்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டில் போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்பட்ட வேலை நிறுத்தங்களின் காரணமாக அப்பாவி மக்கள் நெருக்கடிக்கு உள்ளான விதத்தை நாம் கண்டோம்.

ஆகையால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் திடீரென மேற்கொள்ளும் அநீதியான வேலை நிறுத்த போராட்டங்கள் போன்ற விடையங்களின் போது நடுநிலையாக சிந்தித்து, மலரவிருக்கும் புதிய வருடத்தில் சரியான சிந்தனையுடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு, சக மனிதனை சமமாக கருதும், சமூக நீதி மலரும் வகையில் படிப்படியாக இலங்கை தேசத்தை கட்டி எழுப்பும், மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதார மற்றும் மன அழுத்தங்கள் இல்லாதொழியும் புதிய வருடமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இலங்கையர் மற்றும் உலகெங்கும் வாழும் அனைவரினதும் நேர்மைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் புது வருடமாக அமைய பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...