பயங்கரவாத தடுப்புச் சட்ட மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

21 6192892a4ee0d

சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, இன்று (15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அக் குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த அறிக்கையின் முதற் பிரதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு இந்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version