அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் குடுமபஸ்தர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய இந்தச் சந்தேகநபர், கொஸ்ஹேன, போருவதண்ட பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர 16 வகை துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், அதற்கான அனுமதிப்பத்திரத்தைச் சந்தேகநபர் வைத்திருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews