யாழ்., ஈச்சமோட்டைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியின் அருகே குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் கிடங்கு தோண்டியபோது சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை அவதானித்தனர்.
உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், அந்தப் பொருள் கைக்குண்டு என்பதை உறுதி செய்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த குண்டு மீட்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment