நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு அருகாமையில் உள்ள பாதையொன்றுக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பொதியில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில், தற்போது குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து மிக அருகாமையிலேயே நீர்கொழும்பு மேயரின் வீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment