காலி முகத்திடல் போராட்ட களமான ‘கோட்டாகோகம’ பகுதியில் தற்போது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அலரிமாளிகைக்கு முன்னால் இன்று அணிதிரண்ட மொட்டு கட்சி ஆதரவாளர்கள் – வன்முறை குழுவினர், முதலில் மைனாகோகமமீது தாக்குதல் நடத்தினர்.
அதன்பின்னர் காலி முகத்திடல் வளாகத்தில் உள்ள கோட்டாகோகம பகுதிக்கும் நுழைந்தனர்.
அமைதியான முறையில் காலிமுகத்திடலில் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை தாக்கினர். கூடாரங்களை அகற்றினர். அடித்து நொறுக்கினர்.
கலவரத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
#SriLankaNews