இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பனவற்றுக்குத் தீர்வு கோரி, கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் திராஜ் தல்பதாது இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுதுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர்களால் இந்தச் சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சில கிராம உத்தியோகத்தர்கள், கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையில் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment