images 1 3
இலங்கைசெய்திகள்

5 ஆம் தர புலமைப்பரிசில்: 6 ஆம் தர அனுமதி விண்ணப்பக் கால எல்லை டிசம்பர் 12 வரை நீடிப்பு!

Share

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு இன்று (டிசம்பர் 10) அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டே இந்தத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இணையவழி ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கால எல்லை டிசம்பர் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையவழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வசதி டிசம்பர் 05ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேன்முறையீடு குறித்த முக்கிய அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது:

2025ஆம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான முதலாவது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யான பிரசாரங்கள் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு 06ஆம் தரத்திற்காக முதலாம் சுற்றில் பாடசாலைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்காக இணையவழி ஊடாக மேன்முறையீட்டு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...