கோட்டாவின் செலவுகளை அரசே செலுத்தியது!!

Gotabaya Rajapaksa

கோட்டாபய ராஜபக்சவின் விமான செலவுகளை இலங்கை அரசாங்கமே செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றிய அவர்,

சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு செல்வதற்கான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விமான செலவுகளை இணை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஒவ்வொரு ஜனாதிபதிகளுக்கும், உயிரிழந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவிகளும் சட்டத்தின்படி அனுபவிக்கும் அத்தனை வரப்பிரசாதங்களையும், விசேட சலுகைகளையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version