முப்படையினருக்கான புதிய நிவாரணத்திட்டத்தை அறிவித்த அரசாங்கம்
இலங்கையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய பிரதான வேட்பாளர்கள் அரசத்துறை மற்றும் படையினரின் நலன்கள் குறித்து தமது உறுதிமொழிகளை அறிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் படையினருக்கான நலன் திட்டங்களை அறிவித்திருந்தது
சஜித் பிரேமதாசவும் படையினருக்கான தமது திட்டங்களை அறிவித்துள்ளார்
இந்தநிலையில், ஆயுதப்படையினருக்கான நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது
இது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார்.
புதிய முறையின் கீழ் முப்படையினரின் மாதாந்த சம்பளத்துடன் நிவாரணக் கொடுப்பனவுகள் இணைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புடையினரின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதும் இந்த சீரமைப்பின் நோக்கமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.