அரச அதிகாரிகளிற்கு மிரட்டல் விடுத்து தரகுப்பணம் பெறும் பிள்ளையான்!

rtjy 144

அரச அதிகாரிகளிற்கு மிரட்டல் விடுத்து தரகுப்பணம் பெறும் பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுமார் 14 வருடங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தான் இருந்தார்.அந்த 14 வருட காலப்பகுதியில் தோன்றாத எண்ணம் தற்போது தோன்றுகின்றமை நகைப்புக்குரிய விடயமாகும்.

மேலும், பிள்ளையான் என்பவர் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக செயற்படுவதினை தவிர்த்து அதிகாரிகளை மிரட்டுதல்,அதிகாரிகளின் உதவியுடன் கிரவல் மண் அகழ்விற்கு அனுமதியளித்து அதன் ஊடாக கிடைக்கும் தரகு பணத்தினை பெறுதல் போன்ற விடயங்களிலேயே அதிகளவு ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version