இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

20

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக சிவில் சமூக ஆர்வலர் நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சட்டமாா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை செயலாளர் இந்த விடயத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா ஒப்பந்தத் தகவல்களை வெளியிட விரும்பாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது என்பதால், அந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இது நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறுவதாகவும், நாட்டின் நீதித்துறை கூட இந்தியாவுக்கு பணிந்து, அதன் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version