5 36
இலங்கை

அரசாங்கத்தின் நோக்கம் என்ன..! வெளிப்படையாக தெரிவித்தார் பிரதமர் ஹரினி

Share

அரசாங்கத்தின் நோக்கம் என்ன..! வெளிப்படையாக தெரிவித்தார் பிரதமர் ஹரினி

அரச சேவையை அரசாங்கம் ஒருபோதும் அற்பமானதாகக் கருதுவதில்லை என்று கூறிய பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya), அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக ஊழியர்களிடையே உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டை அபிவிருத்தி செய்ய மக்களின் நம்பிக்கை தேவை

பொதுச் சேவைகள், அரச பொறிமுறைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

“அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான பொது நம்பிக்கையே தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது, அது நம் நாட்டில் இல்லை.

அரசியல்வாதிகள் மற்றும் பொது சேவைகள் மீது மக்களுக்கு எதிர்மறையான அணுகுமுறை உள்ளது. அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் பயனற்றவை என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவை அற்பமானது என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

வலுவான, திறமையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொது சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

24 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு – மெல்பேர்ன் விமான சேவைகள் அதிகரிப்பு: ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் அங்கு வசிக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின்...

23 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: புதிய விலைப் பட்டியல் அறிவிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத்...

22 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு: கொடையாளர்களின் உதவி கோரல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகைக் குருதிக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக...