24 66f6d1015ea81
அரசியல்இலங்கைசெய்திகள்

2025 இல் வரி வருமானம் ரூ. 4,033 பில்லியன்: வாகன இறக்குமதி மூலம் ரூ. 350 பில்லியன் ஈட்டியுள்ளது அரசாங்கம்!

Share

2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் (ஜனவரி – ஒக்டோபர்) அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கை தெரிவிக்கின்றது.

இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக 1,970 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களம் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் வாகன இறக்குமதி வரி வருமானம் 48 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் 350 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கு அதிகபட்ச பங்களிப்பு வற் (VAT) வரியின் ஊடாகக் கிடைத்துள்ளதுடன், அது 1,615 பில்லியன் ரூபாவாகும்.

இதற்கு மேலதிகமாக வருமான வரி மூலம் 1,167 பில்லியன் ரூபாவை 2025 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...