ஜனாதிபதி அவசர அறிவுறுத்தல்

24 660e650e4cb83

ஜனாதிபதி அவசர அறிவுறுத்தல்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான விரிவான வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Exit mobile version