இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் தகவல்

Share
tamilni 222 scaled
Share

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் தகவல்

சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளானது அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் (colombo) ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாமானால் நிச்சயமாக நாம் பெற்றுக்கொடுப்போம்.

மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது. தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரிச் சுமை அதிகரித்து செல்கின்றது.

நாட்டின் வரிப்பணம் முழுவதனையும் சம்பளம் வழங்குவதற்கு செலவிட முடியாது.

ஏனெனில் வரிப்பணம் முழுவதனையும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு செலவிடுவதன் மூலம் நாட்டை முன்கொண்டு செல்லமுடியாது.

எனவே தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளானது அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...