9 29
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Share

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையானது, திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தனவினால் நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அந்த சுற்றறிக்கையில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியுள்ள மற்றும் குறைந்தபட்சம் 30 சதவீத இலாபத்தை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கு ஈவுத்தொகையாக அல்லது வரியாக செலுத்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 25,000 அல்லது 20,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவாக முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை மூலம் உரிய மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திறைசேரி குறிப்பாக மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு நிதி வழங்காது என திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கு அமைச்சரவையின் சிறப்பு அங்கீகாரத்தை பெறுவது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Tamil News lrg 3908923
செய்திகள்பிராந்தியம்

கடுவளை – ரனால பகுதியில் அட்டைப் பெட்டி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து!

கடுவளை – ரனால (Ranala) பிரதேசத்தில் உள்ள ஓர் அட்டைப் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று...

Rajapaksa 759
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ பேரணி: மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு உறுதி!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும்...

1750703321 srilankan airlines
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடர்த்தியான மூடுபனி: 4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மத்தளை மற்றும் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டன!

இன்று அதிகாலையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய அடர்த்தியான மூடுபனி காரணமாக, இங்கு...