அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினரும் போராட்டத்தில்!!

நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதரவாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினரும் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ் போதனா வைத்தியசாலை கிளை தலைவர் பாலு மகேந்திரா,

இன்று நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கள் ஒன்றிணைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் முகமாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினராகியராகிய நாங்களும் அந்த போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளோம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து திண்டாடி வரும் நிலையில் அதற்கு இந்த அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரி நாம் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

முக்கியமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களை பராமரிப்பதற்கான மருந்துகள் தட்டுப்பாட்டு நிலை காணப்படுகின்றது, இந்த தட்டுப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வதன் மூலம் நோயாளர்களுக்குரிய சேவையை வழங்குவதனை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அத்தோடு ஏனைய தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவினை தெரிவிக்கும் முகமாக நாம் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் வைத்தியசாலைகளில் நோயாளர்களை பராமரிப்பதற்குரிய மருந்து பொருட்களை இந்த அரசாங்கம் உடனடியாக வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து நாங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக இன்றைய தினம் இந்த கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் – என்றார்.

IMG 20220428 WA0065

 

#SriLankaNews

Exit mobile version