8 3
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு, அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மார்ச் 6 ஆம் திகதிக்குள் குறித்த திருத்தம் செய்யப்படாவிட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளை எடுக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...