28 10
இலங்கைசெய்திகள்

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரசாங்க ஊழியர் சம்பள கொடுப்பனவை அதிகரிப்பதன் மூலம் ஊழியர்களுக்கும் மாதாந்தம் குறைந்தபட்சம் 55,000 ரூபா அல்லது அதற்கும் அதிகமான தொகை கிடைக்குமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொடர்பில் பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறான கருத்தாக இருக்குமானால் அதனைத் திருத்துவது தனது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் என்ற ரீதியில் தாம் முக்கிய அமைச்சரவை முடிவுகளை மக்களுக்கு அறிவிப்பதாகவும், ஆனால் சில அமைச்சரவை தீர்மானங்கள் மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் அமைச்சரவை கூடிய போது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அதில் 02 முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அனைத்து அரச ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு மறுசீரமைப்பின்றி ரூ.25,000 கொடுப்பனவு வழங்கப்படும். இரண்டாவதாக, அடிப்படை சம்பளம் திருத்தப்படாவிட்டால், 24% முதல் 25% வரை உயரும். அரச பணியில் உள்ள குறைந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 55,000 அல்லது அதற்கு மேல் அதிகமான தொகை கிடைக்குமென தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...