சுகாதாரத் துறையில் வழங்கப்படவுள்ள வேலைவாய்ப்பு
இலங்கை சுகாதாரத் துறைக்கு 3000 தாதியர்களை இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சில், தாதியர் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று (29.08.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பில் சிக்கல்கள் எழுந்தால் அதற்கான அமைச்சரவைப் பிரேரணையை தயாரிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.