பதவியில் நீடிப்பதற்கு கோட்டா வகுக்கும் வியூகம்!

Gotta

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போன இரு ஆண்டுகளை மீளப்பெறுவதற்கு வாக்கெடுப்பு நடத்துமாறு கண்டியில் இளைஞர் ஒருவர் தன்னிடம் யோசனை தெரிவித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றவேளை நான் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்போது இளைஞர் ஒருவர் முன்வந்து சேர் நீங்கள் கொவிட் தொற்றுக் காரணமாக இரண்டுவருடங்களை இழந்துள்ளீர்கள்.

சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஏன் அதனை பெற்றுக்கொள்ள முடியாது என கேள்வி எழுப்பினார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உங்களை எனது ஆலோசகராக்கவேண்டும் எனநான் அவரிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மக்களிற்கு எனது கஸ்டங்கள் குறித்து தெரிந்திருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version