கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலருடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு, சித்துரெல்ல ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து பொதிகளுடன் புறப்பட்டுள்ளன.
குறித்த கப்பல்களில் சிலர் பொதிகளுடன் அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, அதிசொகுசு வாகன பேரணியொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த வாகனப் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வாகனப் பேரணியாக அல்லது அரசின் முக்கியஸ்தர்கள் செல்லும் வாகனங்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
#SriLankaNews