24 6635f3d816468
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் திட்டத்தால் இழப்பை சந்தித்துள்ள இலங்கை அரசு

Share

கோட்டாபயவின் திட்டத்தால் இழப்பை சந்தித்துள்ள இலங்கை அரசு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்(Gotabaya Rajapaksa) அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன உரத் தடை காரணமாக இருநூற்று நாற்பது மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வின்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபர கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவிக்கையில்,

“இரசாயன உரங்களை தடைசெய்யும் தன்னிச்சையான தீர்மானத்தினால் கடந்த வருடம் நெல் மற்றும் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் அந்த ஆண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் சாதாரணமாக ஒரு இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உயர் பருவத்தில் நெல் உற்பத்தி 11 இலட்சத்து முப்பதாயிரத்து நூற்று அறுபத்து நான்கு மெட்ரிக் தொன் (1,130,164) டன் ஒப்பிடுகையில் 36% குறைந்துள்ளது.

மேலும், நெல் உற்பத்தி 30% குறைந்துள்ளது. இரசாயன உரங்கள் மீதான தடையால் கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 47,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கணக்கீட்டின்படி, தேயிலை உற்பத்தி குறைந்ததால் ஏற்பட்ட நிதி இழப்பு ஆறாயிரத்து எண்பத்து நான்கு கோடி ரூபாய் என்பது தெரியவந்தது.

இறப்பர் ஏற்றுமதி 1.8%, தேங்காய் ஏற்றுமதி 5.9%, மசாலா ஏற்றுமதி 18.9% மற்றும் மரக்கறி ஏற்றுமதி 6.6% குறைந்துள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...