கோட்டாபயவுக்கு இனி தலைமறைவு வாழ்க்கையே!

Sarath Fonseka

” கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு வந்தாலும், தலைமறைவாகவே வாழவேண்டிய நிலை ஏற்படும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், சர்வக்கட்சி அரசில் தான் இணையபோவதில்லை எனவும், அமைச்சு பதவி கிடைத்தாலும் ஏற்க தயாரில்லை எனவும் பொன்சேகா அறிவித்தார்.

கூடாரங்களை அகற்றுவதால் மக்கள் போராட்டம் ஓயாது, எனவே, ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கையாளக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

#SriLankaNews

Exit mobile version