அரசியல்இலங்கைசெய்திகள்

“புதிய பிரதமரை உடன் நியமித்துவிட்டு பதவி துறக்கவேண்டும் கோட்டா”

Share
சுமந்திரன் கோட்டாபய
Share

“புதிய பிரதமரை உடனடியாக நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டும்.”

– இவ்வாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியும் பிரதமருமே முழுப்பொறுப்பு. அதனால்தான் இருவரையும் பதவி விலகக் கோரி மக்கள் ஒரு மாதத்துக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியுள்ளார். இதையடுத்து முழு அதிகாரங்களும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றுவிட்டன. இது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

இதனிடையே மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் தீவிரமடைந்துள்ளன.

எனவே, புதிய பிரதமரை உடனடியாக நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பதவியிலிருந்து விலக வேண்டும். அப்போதுதான் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு கிடைக்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...