முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜுலை 9 ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஜுலை 13 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார் ஜனாதிபதி. மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து ஜுலை 14 ஆம் திகதி இராஜினாமாக் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
அதன்பின்னர் தாய்லாந்து சென்றார். இந்நிலையிலேயே அவர் நாளை நாடு திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை வரும் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்குரிய சகல சிறப்புரிமைகளும் அவருக்கு கிட்டும்.
#SriLankaNews