பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பு – கோட்டையில் ஆரம்பித்த பேரணி காலிமுகத்திடலுக்குச் செல்ல விடாமல் பொலிஸாரால் தடுப்புப் போட்டு மறிக்கப்பட்டது . அதையடுத்து மாணவர் ஒன்றியத்தினர் தங்கள் பேரணியின் பாதையைத் திடீரெனமாற்றினர். விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.
அங்கு போடப்பட்டிருந்த தடுப்புக்களை பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், பதற்றமான நிலை ஏற்பட்டது.
பிரதமரின் இல்லத்தின் சுவரில் “கொலைகாரக் கோட்டா வீட்டுக்குப் போ”, “அன்று ரதுபஸ்வல; இன்று ரம்புக்கன”, “225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம்” என்கின்ற வாசகங்களைப் போராட்டக்காரர்கள் சுவரில் எழுதினர்.
#SriLankaNews